ARTICLE AD BOX
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல்
நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படியுங்க: WHAT BRO..விஜய் மகன்னு எதுக்கு சொல்லுறீங்க..செய்தியார்களிடம் கடுப்பான நடிகர்.!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரத்திற்குள் 32 மில்லியன் பார்வைகளை கடந்து, தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர் ஒரு நாளில் 19 மில்லியன் பார்வைகள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ இந்த சாதனையை முறியடித்துள்ளது.
டீசரில் அஜித்தின் பல்வேறு கெட்டப்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.சிறப்பு என்னவென்றால், அஜித் இந்த படத்தில் முதல் முறையாக பல்வேறு ஸ்டைலிஷ் லுக்குகளில் தோன்றுகிறார்.அவரது மாஸான நடிப்பு, ஸ்டைலான தோற்றம், அதிரடி சண்டைக்காட்சிகள் ஆகியவை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டீசரில், அஜித் அணிந்திருந்த வெள்ளை நிற Moschino Couture பிராண்டின் விண்டேஜ் சட்டை மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இத்தாலிய பிராண்ட் சட்டையின் விலை 1,80,000 என தெரியவந்துள்ளது.இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.