ARTICLE AD BOX
சுறா ஓடாது என தெரிந்தும் நடித்தேன்!
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சுறா படத்தில் நடித்த தமன்னா,இப்படம் ஒரு மொக்க படம் என தெரிந்தும் தான் நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: ‘சிவாஜி’ வீட்டில் இத்தனை படங்களா…லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே.!
எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு விஜய்,தமன்னா,வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுறா,இப்படம் நடிகர் விஜயின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்,ஆனால் படம் வெளியாகி விஜய் ரசிகர்களே கழுவி ஊத்தும் நிலைமைக்கு படம் இருந்தது,விஜயின் காரியரில் சுறா படம் படு தோல்வியை அடைந்து நஷ்டம் அடைந்தது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சுறா படம் தோல்வி குறித்து பேசிய தமன்னா அதில்,இப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆனது,சில காட்சிகளில் நான் ஒழுங்காக நடிக்கவில்லை,அதற்கு காரணம் இந்த படம் தொடங்கிய சில நாளே இது ஓடாது,மொக்க படமாக தான் இருக்கும் என தோன்றியது,வேற வழியில்லாமல் கமிட்மெண்டுக்காக நடித்து முடித்தேன் என்று கூறியிருப்பார்.
இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள்,நீங்க அப்போவே விஜயிடம் இதை தெரிவித்திருந்தா,அவர் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பார் என்று புலம்பி வருகின்றனர்.நடிகை தமன்னா தற்போது அவருடைய காதலரை பிரிந்துள்ள நிலையில் இந்தி தெலுங்கு மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
