அட்டையை பார்த்து அரசியல் செய்பவர் அண்ணாமலை… காங்., எம்பி தாக்கு!

3 hours ago 2
ARTICLE AD BOX

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர்: மதுரை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறோம்.

மதுரை மாநகரம் என்றுமே பல நம்பிக்கைகளையும் பலவகையான விழாக்களையும் கொண்டிருக்கிற ஒரு மாவட்டம். காங்கிரஸ் சார்பில் இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு, இந்த பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறோம். மாணவிகளுக்கு இருபது லட்சம் லேப்டாப் கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் வளர்ந்து வரும் நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை கொடுப்பதற்கான சிப்காட் புதிதாக அமைக்க பட்ஜெட்டில் அறிவித்தது பாராட்டப்பட கூடியது.

கிழக்கு மண்டலமும் சேர்ந்து வளர வேண்டும் என்ற உள்நோக்கத்தில் உருவாக்கிய பட்ஜெட்டாக பார்க்க வேண்டும். இது அனைவருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

பட்ஜெட் குறித்து அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு? அண்ணாமலை பட்ஜெட்டை படிக்காமல் பேசுகிறார். ஒன்றுமில்லை என்று சொல்லுகிறார். மாணவிகளுக்கு லேப்டாப், சிப்காட், சாலை வசதி உள்ளிடட்வை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்துள்ளது. அது காலி பட்ஜெட்டா?.

Cong MP Manickam Tagore Ciritcized Annamalai

தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருக்கும் அண்ணாமலை எது செய்தாலும் குறை சொல்லி வருகிறார். மத்தியில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வெறும் பட்ஜெட் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏதும் அறிவிப்பு இல்லை. தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி தரவில்லை என்று தான் கூறினோம்.

அண்ணாமலையை பொறுத்த வரை வெறும் அட்டையை பார்த்து அரசியல் பண்ணுகிறார் என்றார்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!
  • Continue Reading

    Read Entire Article