ARTICLE AD BOX
நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி, 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்தார். கடைசியாக அவர் நடித்து வரும் ஜனநாயகன் படம் 2026 ஜனவரியில் வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் முழுகவனத்தையும் அரசியல் பக்கம் திருப்பியுள்ள விஜய், மடப்புரம் அஜித் கொலை வழக்குக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
நேரடியாக அஜித் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் லாக்அப் மரணத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தவெக ஓட்டு வங்கியை அதிகப்படுத்தும் வியூகமாக பார்க்கப்படுகிறது.
திமுக, பாஜக அல்லாத கட்சிகளை தனது கூட்டணிக்கு வரவேண்டும் என்றும், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெகவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் இரண்டாவது மாநாட்டை மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடத்துகிறார் விஜய். இதில் முக்கியமானது என்னவென்றால், விஜயகாந்தின் பிறந்தநாளில் அவர் மாநாடு நடத்துவதுதான்.
இது தற்போது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் எதற்காக கேப்டன் பிறந்தநாளில் மாநாட்டை நடத்த வேண்டும்? ஒருவேளை தேமுதிகவை இழுப்பதற்கான வேலையா? என அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட கேப்டன் பிறந்தநாளில் தனது அரசியல் மாநாட்டை நடத்துவதாக இருந்தாலும், தேமுதிகவை இழுக்கத்தான் பிளான் போடுவதாக கூறப்படுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
