ARTICLE AD BOX
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படியுங்க: நீங்கதான் எனக்கு PRECIOUS… தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கட்டளை!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், இன்று காலை 9.30 மணிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வருகை புரிந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலுவின் மகள் அனுஷாவின் திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த இந்த திருமணத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருமண நிகழ்வுக்கு வருகை தந்த வானதி சீனிவாசன், மணமக்களை வாழ்த்தினார், . முன்னதாக வானதி சீனிவாசனை திமுக எம்பி கனிமொழி வரவேற்றார். இருவரும் பரஸ்பரமாக சந்தித்து,நலம் விசாரித்துக் கெண்டனர்.