அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளிக்கு ஆயுள்… 30 ஆண்டுகள் சிறை : நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

4 weeks ago 27
ARTICLE AD BOX

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தல் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் திமுக நிர்வாகி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இன்னொரு நபருக்கு ஞானசேகரன் போன் மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை,

ஞானசேரகன் ஆளுங்கட்சி நிர்வாகி என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை வாக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம்

இந்த குழு அளித்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சி அளித்தனர். இதையடுத்து அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

ஞானசேகரன் குற்றவா என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். இதையடுத்து இன்று தண்டனை விபரம் வழங்கப்பட்டது. அதில், 30 ஆண்டுகளுக்கு குறையான ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.90,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

  • director vikram sugumaran passed away due to heart attack பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!
  • Continue Reading

    Read Entire Article