ARTICLE AD BOX
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது.
நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா இதற்கான அவிப்பை வெளியிடுவார் என சொல்லப்பட்டது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கிய அவர் இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இன்று காலை முதல் தமிழக பாஜக பரபரப்பாகவே காணப்பட்டது. ஒரு பக்கம் பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்தார்.
இதையும் படியுங்க: பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!
மறுபக்கம் அமித்ஷா செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஒத்திவைக்கப்பட்டடே இருந்த நிலையல், நயினார் நாகேந்திரன் மட்டும் போட்டியிட்டதால் அவர் போட்டியின்றி தேர்வானார் என தகவல் பரவியது.
இதையடுத்து அமித்ஷா, தனது X தளப்பக்கத்தில் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி நயினார் நாகேந்திரன் தேர்வானார் என பதிவிட்டார். தொடர்ந்து அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்றும், அவரது பணி அளப்பரியது என்றும் கூறியிருந்தார்.
அமித்ஷா பதிவிட்ட மறுநொடி தனது காரில் பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்து புற்ப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஐடிசி கிராண் சோழா ஒட்டலில் உள்ள அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர்களுடன், கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உடனிருநத்னர்.
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு என்ற அறிவித்தவுடன் தான் இபிஎஸ் தனது வீட்டில் இருந்தே புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைய வேண்டுமென்றால், அண்ணாமலையை நீக்க வேண்டும் என அதிமுக நிபந்தனை வைத்ததாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

6 months ago
73









English (US) ·