அண்ணாமலைக்கும், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம்? கொந்தளித்த தவெக!

1 month ago 39
ARTICLE AD BOX

அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார் என தவெக ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் பேசுகையில், “ஒவ்வொரு நாளும் தவெக தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். கோவை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக போராடி வந்துள்ளோம்.

போராட்டம் என்பது வேறு, இப்படி அசிங்கமாகப் பேசுவது என்பது வேறு. அண்ணாமலை சமநிலை குலைந்து, என்னப் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் எவ்வளவோ உள்ளது. உங்களுக்கு இடுப்பைக் கிள்ளுவதுதான் நினைவுக்கு வருமா?

சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்டோர் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்களுடன் பிரசாரத்தில் நடனமாடியது மறந்துவிட்டதா? பேசும்போது ஒவ்வொரு வார்த்தைகளிலும் அண்ணாமலை கவனமாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை நாகரீகமாகப் பேச வேண்டும்.

Sivaji Krishnamoorthy

அண்ணாமலையின் பேச்சை பாஜகவில் உள்ள வானதி சீனிவாசன் ஏற்றுக்கொள்வாரா? பத்திரிகையாளர்களை அவர் எப்படி மோசமாகப் பேசினார்? திமுக ஃபைல்ஸ் என்று ஒரு தகர டப்பாவை தூக்கிக் கொண்டு வந்தார். அதில் என்ன நடந்துள்ளது? இப்போது டாஸ்மாக் ஊழல் ரூ.1,000 கோடி என்பது கையளவு தண்ணீர் என்று நாங்கள் கூறியுள்ளோம்.

டெல்லி, சத்தீஸ்கர், தெலுங்கானாவில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொண்ட பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்குப் பெயர்தான் செட்டிங். பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக – பாஜக இடையே எதிர்ப்பதை போல் எதிர்த்து, உள்ளுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் ஹேமாமாலினி, கங்கனா ரணாவத் ஆகியோர் இடுப்பு கிள்ளி அரசியல் செய்துதான் நாடாளுமன்றத்தில் உள்ளார்களா? கர்நாடகாவில் சட்டப்பேரவையில் இருந்து ஆபாசம் பார்த்தார்கள். பாலியல் தொல்லை கொடுத்ததாக விளையாட்டு வீராங்கனை தெருவில் இறங்கி பாஜகவுக்கு எதிராகப் போராடினார். இவர்கள் பேசலாமா?

அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்வது அவருக்கும் நல்லது, அவரின் அரசியலுக்கும் நல்லது. அண்ணாமலைக்கும், திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதுபோன்று அண்ணாமலை மீண்டும் பேசாமல் இருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சமச்சிட்டேன் சாப்ட்ருங்க.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி விபரீத முடிவு.. கொடுமையின் உச்சம்!

முன்னதாக, டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய போராட்டத்தின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு நாடகமாடுவதை விட்டுவிட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, நடிகர் விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்றும், தவெக தங்களின் லிமிட்டை கிராஸ் செய்யக் கூடாது என்றும் அண்ணாமலை பகிரங்கமாக பதிலளித்திருந்தார்.

  • Raghu Ram in Good Bad Ugly அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!
  • Continue Reading

    Read Entire Article