ARTICLE AD BOX
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20 எடை கொண்ட சிலிண்டர்களையும், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை உள்ள சிலிண்டர்களையும் விநியோகம் செய்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வைத்து சிலிண்டர் விலையல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
₹5.50 காசுகள் உயர்ந்து ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.7 விலை குறைந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதியான முதல்நாளே ₹5.50 உயர்ந்துள்ளது.