ARTICLE AD BOX
இந்தியாவின் முதல் AI திரைப்படம் – NAISHA
தற்போது உள்ள கால கட்டத்தில் டெக்னாலஜியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது,அதிலும் குறிப்பாக AI தொழில்நுட்பம் வந்த பிறகு பல வித வேலைகளை மிக எளிதாகவும் கச்சிதமாகவும் முடித்து விடுகிறது.
இதையும் படியுங்க: நயன்தாரா யாருடைய மனைவி…வெளிவந்தது ‘டெஸ்ட்’ பட வீடியோ.!
பல்வேறு துறைகளில் சாதித்து வரும் இந்த AI டெக்னாலஜியை வைத்து தற்போது இந்தியாவின் முதல் AI திரைப்படம் உருவாகியுள்ளது ‘NAISHA’ என்ற பெயரிடப்பட்ட இத்திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை விவேக் அன்சாரியா இயக்கியுள்ளார்,நய்ஷா போஸ்,ஜெயின் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,இவர்களின் முகபாவனைகள் மற்றும் நடிப்பு முழுவதுமாக AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது,மனிதர்களுக்கும்,செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய உலகிற்கும் உள்ள உறவுகள் பற்றிய கோணத்தில் இந்த படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே AI பயன்படுத்தி சில படங்கள் வந்திருந்தாலும்,முழுமையாக AI தொழில்நுட்பம் கொண்டு உருவான முதல் திரைப்படமாக NAISHA சாதனையை படைத்துள்ளது.
இப்படம் வெற்றிபெற்றால்,இந்திய திரைத்துறையில் AI மூலம் உருவாக்கப்படும் படங்களுக்கு புதிய வழி பிறந்து,எதிர்காலத்தில் AI மூலம் பல படங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.