அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்! ஈபிஎஸ் வாக்குறுதி…

2 months ago 37
ARTICLE AD BOX

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவி ஏற்றதை  தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பல ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்றனர். எனினும் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். 

அதனை தொடர்ந்து வந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான சூழல் சூடுபிடித்து வருகிறது. அந்த வகையில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிமுகவின் சாதனைகள் குறித்தும் திமுகவை விமர்சித்தும் பேசி வருகிறார். 

Edappadi Palaniswamy said that if admk wins free laptop will be issue to students

இந்த நிலையில் இன்று தென்காசியில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 4000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் எனவும்  எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துள்ளார். இது பலரின் கவனத்தை குவித்துள்ளது. 

  • Actress sangeetha and singer krish divorce இன்ஸ்டா  பெயரில் மாற்றம்? கிரிஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற சங்கீதா? என்னப்பா சொல்றீங்க!
  • Continue Reading

    Read Entire Article