ARTICLE AD BOX
கோவை மாவட்டம், குறிச்சி பகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 85வது மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த், அ.தி.மு.க-வின் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு நன்றி தெரிவித்து ஒட்டிய வரவேற்பு போஸ்டர், தற்போது மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாமோதரன், தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி, கோண வாய்க்கால் பாளையம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித் தந்து உள்ளார்.
இந்த நலத் திட்டத்துக்காக, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் சரளா வசந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, வரவேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர், அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போஸ்டர் ஒட்டி நன்றி தெரிவித்துள்ளதால், மாவட்ட அரசியலில் பரபரப்பையும், விவாதங்களையும் உருவாக்கி உள்ளது.

5 months ago
89









English (US) ·