அதிமுக கோட்டையை வெல்ல வியூகம்? திமுக தலைமையால் திருப்பூருக்கு வந்த சோதனை!

2 days ago 4
ARTICLE AD BOX

திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர்: திருப்​பூர் மாவட்ட திமுகவை கிழக்​கு, மேற்​கு, தெற்கு, வடக்கு என நான்காக பிரித்​து​ள்ளது திமுக தலை​மை. இதில், கிழக்கு மாவட்டப் பொறுப்​பாள​ராக செல்​வ​ராஜ், மேற்கு மாவட்டப் பொறுப்​பாள​ராக அமைச்சர் மு.பெ.​சாமி​நாதன், வடக்கு மாவட்டத்துக்கு தினேஷ்கு​மார், தெற்கு மாவட்​டத்​துக்கு இல.பத்​ம​நாபன் ஆகியோர் பொறுப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்டுள்ளனர்.

திசைக்கு நான்கு பேரை நியமித்துவிட்டோம், இனி பிரச்னை இல்லை என திமுக தலைமை பெருமூச்சு விடுவதற்குள், இது என்ன புது தலைவலி என்ற மனநிலையில் உள்ளனர் பொறுப்பாளர்கள். இது தொடர்​பாக தனியார் நாளிதழிடம் பேசிய திருப்​பூர் திமுகவினர், “4 பேரை​யும் மாவட்​டப் பொறுப்​பாளர்​களாக அறி​வித்​ததுமே இவர்களுக்குத்​தான் தலைமை சீட் கொடுக்​கும் என்ற முடிவுக்கு வந்​து​விட்ட கட்​சியினர் சலிப்​பில் உள்ளனர்.

திருப்​பூர் வடக்கு மற்​றும் தெற்கு தொகு​தி​களைக் கேட்டு கடந்த முறையே கம்யூனிஸ்ட்கள் மோதின. இந்த ​முறை​யும் அவர்​கள் போட்​டிக்கு வரு​வார்​கள். எனவே, தனக்கு சீட் இல்​லாமல் போய்​விடுமோ, அதற்​காகத்தானோ மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்பு தந்​திருக்​கிறது தலைமை என்ற சந்​தேகத்​தில் இருக்​கி​றார் திருப்​பூர் தெற்கு எம்​எல்​ஏ செல்​வ​ராஜ்.

Tiruppur DMK

ஒரு​வேளை, பல்​லடம் தொகு​தி​யில் சீட் கொடுத்​தால், அதி​முக கோட்​டையை வெல்​ல​ முடி​யுமா என்ற சந்​தேக​மும் அவரது கலக்​கத்​துக்​கு காரணமாக உள்ளது. கடந்த முறை தொண்​டா​முத்​தூரில் எஸ்​.பி.வேலுமணி​யிடம் தோற்ற கார்த்​தி​கேய சிவசே​னாபதி, இந்த​முறை காங்​க​யத்​தில் போட்​டி​யிடும் திட்​டத்​தில் உள்ளார்.

ஒரு​வேளை, அவர் நினைத்​தது நடந்​தால் அமைச்​சர் சாமி​நாதன் மடத்​துக்​குளத்​துக்கு ​மாற வேண்டி இருக்​கும். ஆனால், அங்​கே​யும் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வரின் மகள் தொகுதியைப் பிடிக்க முழு வீச்​சில் இறங்கி வரு​கி​றார். இதனால், சாமி​நாதனுக்​கும் தர்மசங்​கட​மான நிலையே.

இதையும் படிங்க: ’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!

மேலும், தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் இல.பத்​ம​நாபன் உடுமலைக்கு குறிவைக்​கி​றார். அதிலு​ம், அதி​முக வலு​வாக இருக்​கும் தொகு​தி. கடந்​த​ முறை மடத்​துக்​குளம் தொகுதியில் போட்​டி​யிட்ட முன்​னாள் எம்​எல்​ஏ ஜெய​ரா​மகிருஷ்ணன், சில உள்ளடிகளால் தோற்​கடிக்​கப்​பட்​டார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கொங்கு மண்டலம் எனப்படும் கொங்கு பெல்ட் மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதிகள் அதிமுக கோட்டையாகவே கருதப்படும் நிலையில், அந்த கொங்கு மண்டலத்தைப் பிடிக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. இது, கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie OTT Release and Success போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!
  • Continue Reading

    Read Entire Article