ARTICLE AD BOX
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு புதிய தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது ஆளும்கட்சியான திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, அதிமுக – பாஜக இடையே கள்ளக்கூட்டணி இருந்தது உறுதியாகியுள்ளது. அன்றே முதலமைச்சர் ஸ்டாலின் இதை சொன்னார் தற்போது உறுதிசெயயப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிறுபான்மையினருக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார் என்றும், அண்ணா, ஜெயலலிதாவை அவமதித்து பேசியவர்களுக்கு விருந்தும் கொடுத்துள்ளார்.

பாஜக அரசு எதிர்க்கட்சிகளை மிரட்ட அமலாக்கத்துறை, ஐடியை பயன்படுத்தி பணிய வைக்கிறது. இபிஎஸ் தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா தான் கூற வேண்டுமா? அருகில் இருந்த இபிஎஸ் என பேசவே இல்லை.
அமித்ஷா கூட்டணி குறித்து பேச, இபிஎஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கூட்டணியை அறிவிப்பது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்தான், ஆனால் இபிஎஸ் மவுனமாக இருந்தது ஏன்? என கூறினார்.

Tags: AIADMK, AIADMK BJP alliance, dmk, Edappadi Palanisami, eps, Kanimozhi MP, Politics, அஇஅதிமுக, அமித்ஷா, அரசியல், எடப்பாடி பழனிசமி, கனிமொழி எம்பி, திமுக