அதிமுகவுக்கு எதிராக தவெக? டெல்லியால் மாறும் ரூட்!

1 month ago 27
ARTICLE AD BOX

பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் நோக்கில் அதிமுக இருப்பதாக கூறப்படும் நிலையில், தவெக அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என கூறப்படுகிறது.

சென்னை: ‘சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும். கொள்கை வேறு; கூட்டணி வேறு; ஓராண்டுக்கு முன்பே கூட்டணி குறித்து கூற முடியாது” என்பன அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபின் பேசியவை.

இது, மீண்டும் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்ற நிலைப்பாட்டை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக தமிழக அரசியல் மேடையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனை சென்னையில் உள்ள டி.ஜெயக்குமார், ‘பாஜகவால் தான் தோற்றேன்’ எனக் கூறி மறுத்தாலும், இரும்பு மனிதர் அமித்ஷா என புகழ்பாடி ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக உறுதியாக்கியுள்ளார்.

ஒருவேளை அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி உறுதியானால், பாமகவும் அதில் ஒரு அங்கம் வகிக்கும். ஆனால், தற்போது அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தேமுதிக, மீண்டும் கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகமே. இதனிடையே, விஜயின் தவெக முக்கிய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

EPS vs TVK

இதன்படி, இனி அதிமுகவை விமர்சித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கட்சி தொடங்கி மாநாடு, விமான நிலைய எதிர்ப்பு, 2ம் ஆண்டு துவக்க விழா என அனைத்திலும் அதிமுக பற்றி ஒருவார்த்தை கூட விஜய் பேசவில்லை. அதேநேரம், கூத்தாடி என்ற போர்வையில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டுக் கொண்டே வந்தார் விஜய்.

இதையும் படிங்க: Camp Fireல் மனித எலும்புகள்.. மதுரைக்கு வந்த Call.. கொடைக்கானல் திகில் சம்பவம்!

ஆனால், தற்போது தனது கொள்கை எதிரியாக பார்க்கும் பாஜக உடன் அதிமுக இணக்கம் காட்டுவதுபோல் உள்ளதால், இனி அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை விஜய் எடுப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தவெக உடன் மறைமுகமாக நடைபெற்று தோல்வியில் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது.

  • Veera Dheera Sooran 2 release issue ‘வீர தீர சூரன்’ படத்திற்கு தடை… ரசிகர்கள் ஏமாற்றம்..!
  • Continue Reading

    Read Entire Article