ARTICLE AD BOX
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தபடி, GST விகிதங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த GST கவுன்சில் கூட்டத்தில், சாமானிய மக்களின் பாக்கெட்டுக்கு ரொம்பவே இதமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கு.
புது GST விகிதங்கள் : என்ன மாறியது?
அன்றாட பொருட்களுக்கு சூப்பர் சேமிப்பு! ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, டூத் பிரஷ், சேவிங் கிரீம் – இவற்றுக்கு GST 18%-லிருந்து 5% ஆகக் குறைப்பு
இனி இவை கடைகளில் கொஞ்சம் மலிவாகக் கிடைக்கும். உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST இல்லவே இல்லை. பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்கள் – 12%-லிருந்து 5% ஆகக் குறைவு. விவசாய உபகரணங்கள், டிராக்டர் – GST 5% மட்டுமே!
வீட்டு உபயோகப் பொருட்களுக்கு நிம்மதி! ஏசி, டிவி, கார் – GST 28%-லிருந்து 18% ஆகக் குறைப்பு. UHT பால், ரொட்டி, சப்பாத்தி – இவற்றுக்கு GST கிடையவே கிடையாது! பிரட் (பீட்சா பிரட், பரோட்டா, பராத்தா உட்பட) – ஒரே மாதிரி GST விலக்கு!
வாகனங்களுக்கு சற்று மாற்றம்
350CC இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள், தனியார் விமானங்கள் – GST 40%. மோட்டார் வாகன பாகங்கள், ஆட்டோ வாகனங்கள் – 28%-லிருந்து 18% ஆகக் குறைவு.
நொறுக்கு தீனி & புகையிலை பொருட்கள்
நொறுக்கு தீனிகள், வெண்ணெய் – 18%-லிருந்து 12% ஆகக் குறைவு. பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள் – GST 40%.
எப்போது அமலுக்கு வரும்?
இந்த புதிய GST விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். ஆனா, சிகரெட், பீடி, புகையிலை பொருட்களுக்கு எந்த மாற்றமும் இல்லை!
ஏற்கனவே உருவாக்கிய e-way bills? அவை செல்லுபடியாகவே இருக்கும். புதுசா உருவாக்க வேண்டாம்!
பேக்கேஜ் பன்னீர் மீது GST?
பேக்கேஜ் செய்யப்படாத பன்னீருக்கு GST இல்லை. லேபிள் செய்யப்பட்டவற்றுக்கு மட்டும் விகித மாற்றம். சிறு தொழில்களை ஊக்குவிக்கவே இது!
விளையாட்டு போட்டி டிக்கெட்களுக்கு?
₹500-க்கு குறைவான டிக்கெட்களுக்கு GST விலக்கு. அதற்கு மேல் இருந்தால் 18% GST. (IPL தவிர!)
