ARTICLE AD BOX
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ள திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: லேடீஸ் கோச்சில் ஏறிய 25.. தனியாக தவித்த 23.. அடுத்த நொடியில் நிகழ்ந்த கொடூரம்!
திருப்பரங்குன்றம் முழுவதும் முருகனுக்கே சொந்தம் என்றும், அங்குள்ள தர்காவை அகற்ற வேண்டும் என அண்ணாமலை பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பாஜக மாநில அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருவரும் பேசியதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து புரின் பேரில் சைபர் கிரைம் காவலர்கள் அண்ணாமலை மற்றம் ஹெச் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

7 months ago
93









English (US) ·