ARTICLE AD BOX
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: 2 மாதத்திற்கு முன்னரே சொன்ன மனோஜ் சகோதரி… நெப்போலியன் போட்ட பதிவு!
பாரதி ராஜாவின் மகனான மனோஜ், தந்தை இயக்கத்தில் தாஸ்மஹால் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அல்லி அர்ஜூனா, சமுத்திரம், ஈரநிலம், கடல் பூக்கள் போன்ற படங்களில நடித்துள்ளார்.

இவர் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்த செய்தி, தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நடிகை மீனா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது X தளப்பக்கத்தில், மனோஜ் உடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்து படம் நடித்ததில்லை என்றாலும், அவருடன் மீனா எடுத்த பழைய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
