ARTICLE AD BOX
தூய்மை இயக்கம் 2.0 திட்டம் சார்பில் மாபெரும் கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ் மாபெரும் தூய்மை செய்யும் பணியினை மதுரை ஊமச்சிளம் பகுதியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கு பெற்ற நிலையில் இன்றைய தூய்மை பணியானது ஊமச்சிகுளம் முதல் கடச்சனேந்தல் வரை சுமார் 2.5 கி. மீ நீளத்திற்கு தூய்மை செய்யும் பணியில் 400க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூங்கா நகர் மதுரையை தூய்மை நகராக மாற்றக்கூடிய இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் . நகர் பகுதியில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துணை முதல்வர் மதுரை வருகை குறித்த கேள்விக்கு அது ரகசியம் என்று தெரிவித்தார் அமைச்சர் மூர்த்தி.

2 months ago
45









English (US) ·