ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இதனால் உலகம் முழுவதும் அறியப்படும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.
நேற்று அவர் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கடைசியாக வெளியான குபேரா நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
தற்போது இட்லி கடை படத்தில் நடித்து வரும் தனுஷ், விரைவில் படம் வெளியாக உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரையுலகினர் கூறினர்.
அது மட்டுமல்லாமல், போயஸ் கார்டனில் தனது வீட்டுக்கு முன் காத்திருந்த ரசிகர்களை அழைத்து செல்பி எடுத்த தனுஷ், விருந்தும் வைத்து அசத்தினார்.
இதனிடையே தனுஷ், குறிப்பிட்டு ஒரு நடிகைக்கு மட்டும் ஸ்பெஷல் நன்றியை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் தனுஷ் நடித்து வரும் tere ishq mein என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் க்ரித்தி சனோன்.
 பல பிரபலங்கள் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், க்ரித்த சனோன் பதிவை மட்டும் போஸ்ட் செய்து அவருக்கு ஸ்பெஷல் நன்றி என கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
 குபேரா பட வெற்றியை கொண்டாடி இரவு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்த தனுஷ், அதில் பல நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக அதில் க்ரித்தி சனோன் கலந்து கொண்டது கிசுகிசுக்கப்ப்டடது.

தற்போது பல பிரபலங்கள் வாழ்த்து கூறியதற்கு, ஒட்டுமொத்தமாக நன்றி கூறாமல், க்ரித்தி சனோனுக்கு மட்டும் அவர் நன்றி கூறியுள்ளது தனுஷ் தனது தலையில் அவரே மண்ணை வாரிப் போடுவது போல உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
                        3 months ago
                                42
                    








                        English (US)  ·