ARTICLE AD BOX
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை: பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காயத்ரி தேவியின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்காக, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.
அவரை, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் வாசலில் சென்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தார். பின்னர், பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து, நிகழ்வில் இருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடன் கைகுலுக்கி இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதனிடையே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இபிஎஸ் – எச்.ராஜா சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய எச்.ராஜா, “இது ஒரு திருமண நிகழ்ச்சி. எனவே, ஒருவரையொருவர் நலம் விசாரித்தோம்.
அரசியல் பற்றி பேசவில்லை” எனக் கூறியுள்ளார். மேலும், அதிமுக – பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் என திமுக கூறியுள்ளது குறித்து பேசிய எச்.ராஜா, “அமைதிப்படையை அனுப்பி இலங்கையில் தமிழர்களைக் கொன்ற காங்கிரஸ், முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உங்களை (திமுக) குறையே சொல்லவில்லையே.
இதையும் படிங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!
எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார். சமீபத்தில், அண்ணாமலையின் பேச்சும் அதிமுக உடன் இசைந்து போவது போன்றே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில், எச்.ராஜாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

7 months ago
89









English (US) ·