ARTICLE AD BOX
அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார்.
பீகார் மாநிலம், சுபவுல் மாவட்டம் ஜீவ்சாபூர் பகுதியை சேர்ந்த சிவ்சந்திர முகியா என்பவருக்கு ரீட்டா தேவி என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்க: செந்தில் பாலாஜி போல மாவட்ட செயலாளர்கள் அமைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை : உதயநிதி பாராட்டு!
ரீட்டா தேவிக்கு 24 வயது உறவினரான மிதிலேஷ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. ரீட்டாதேவிக்கு மிதிலேஷ் மருமகன் முறை ஆகிறார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விஷயம் சிவ்சந்திர முகியாவுக்கு தெரிய வர, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதை சட்டை செய்யாத மனைவி, மிதிலேஷ் உடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார். ஆத்திரமடைந்த கணவர், மிதிலேஷை கடந்த ஜூலை 2ஆம் தேதி வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
உறவினர்களுடன் சேர்ந்து மிதிலேஷை கடுமையாக தாக்கியுள்ளார் சிவ்சந்திர முகியா. தடுக்க வந்த மிதிலேஷ் பெற்றோரையும் தாக்கியுள்ளனர். கடுமையான ஆயுதங்கள், கட்டைகளை கொண்டு தாக்கியதால் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார் மிதிலேஷ்.
மேலும் ரீட்டா தேவியை திருமணம் செய்ய வேண்டும் என மிதிலேஷை கடடாயப்படுத்தியுள்ளார். மேலும் ரீட்டா தேவி நெற்றியில் குங்குமம் வைக்க வற்புறுத்தி மிதிலேஷை தாக்கியுள்ளார். பயத்தில் அவரும் குங்குமம் வைத்துள்ளார்.
இதை நேரில் பார்த்த மிதிலேஷ் பெற்றோர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திறகு காவல்துறை வந்ததும், சிவ் சந்திர முகியா உட்பட உறவினர்கள் தப்பியோடினர். ரீட்டா தேவி மற்றும் மிதிலேஷை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகாத உறவில் இருந்த சொந்த அத்தையை திருமணம் செய்து கொள்ளுமாறு மருமகனை தாக்கிய மாமனின் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.