ARTICLE AD BOX
சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு…
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விவாகரத்து பெற்ற தனுஷ், தற்போது சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் தனுஷ் ஒரு பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக அரசல் புரசலாக ஒரு தகவல் வெளிவருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது “தேரே இஷ்க் மே” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அவர் இயக்கி நடித்த “இட்லி கடை” திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக வெளியாகும் தகவல் அனைவரின் கவனத்தையும் குவித்துள்ளது.

யார் அந்த நடிகை?
அதாவது “சீதா ராமம்” திரைப்படத்தின் மூலம் நமது மனதை கவர்ந்த மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகிறது.

இருவரும் இணைந்து எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் நிச்சயம் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று “ஓடுகிறது” என அடித்துச் சொல்கின்றனர். எனினும் இது வதந்தியா? அல்லது உண்மையிலேயே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா? என்பது குறித்து உறுதிபடுத்தக்கூடிய தகவல் எதுவும் இல்லை.

மிருணாள் தாக்கூர் தற்போது “டகாய்ட்”, “தும் ஹோ தோ”, “பூஜா மேரி ஜான்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அட்லீ-அல்லு அர்ஜூன் காம்போவில் உருவாகும் திரைப்படத்திலும் மிருணாள் தாக்கூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த கியூட் நடிகையுடன் டேட்டிங் செய்யும் தனுஷ்? ஓஹோ கதை இப்படி போகுதா!

2 months ago
29









English (US) ·