அந்த நடிகருக்கு முத்தம் கூட கொடுக்கத் தெரியாது- விஷால் பட நடிகை பகிர்ந்த அந்தரங்கம்…

3 months ago 45
ARTICLE AD BOX

விஷால் பட நடிகை

விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தீராத விளையாட்டுப் பிள்ளை”. இத்திரைப்படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர்தான் தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

vishal movie actress Tanushree Dutta shared about intimacy scenes with bollywood actor

இவர் முதன்முதலில் பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் “ஆஷிக் பனாயா அப்னே”.  இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மிக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார். இதில் “ஆஷிக் பனாயா” என்ற பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இப்பாடலில் இம்ரான் ஹாஸ்மிக்கும் தனுஸ்ரீ தத்தாவுக்கும் இடையே அந்தரங்க காட்சிகளும் முத்த காட்சிகளும் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. இதனாலேயே அந்த சமயத்தில் இப்பாடல் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாக ஆனது. 

முத்தம் கொடுக்கத் தெரியாது…

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீ தத்தா ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போது, “இம்ரான் ஹாஸ்மியுடன் முத்த காட்சிகளில் நடித்ததில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அவருடன் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். முதல் படத்தில் முத்த காட்சியில் நடிக்க அருவருப்பாக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிக்கையில் அந்த அருவருப்பு இல்லாமல் போனது. 

vishal movie actress Tanushree Dutta shared about intimacy scenes with bollywood actor

தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும் என்றால் நிஜ வாழ்க்கையில் எனக்கும் இம்ரானுக்கு கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை. பாலிவுட்டில் இம்ரான் ஹாஸ்மிக்கு கிஸ்ஸர் பாய் (Kisser Boy) என்ற பெயர் இருக்கிறது, ஆனால் அவர் அப்படி இல்லை” என்று கூறியுள்ளார். இவரின் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • vishal movie actress Tanushree Dutta shared about intimacy scenes with bollywood actor அந்த நடிகருக்கு முத்தம் கூட கொடுக்கத் தெரியாது- விஷால் பட நடிகை பகிர்ந்த அந்தரங்கம்…
  • Continue Reading

    Read Entire Article