ARTICLE AD BOX
குடும்பங்கள் கொண்டாடிய சேரன்
தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் பல திரைப்படங்களை இயற்றியவர் சேரன். அது மட்டுமல்லாது காதலை மையப்படுத்தி எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இவர் இயக்கி நடித்த “ஆட்டோகிராஃப்” திரைப்படம் காலத்தை தாண்டியும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்தது.
ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் “நரிவேட்டா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சேரன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சேரன், மனம் உடைந்துப்போய் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் அப்படி பண்ணிருக்கக்கூடாது
“ஒரு நடிகரிடம் வெகு நாட்களாக கதை சொல்லி வந்தேன். அந்த கதை மிகவும் பிரமாதமான கதை. மிகவும் அருமையான கதையும் கூட. தற்கால குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசக்கூடிய திரைப்படம் அது. ஆனால் சில சொல்லமுடியாத காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது.
ஒரு நடிகருக்கு நாம் கதை சொல்கிறோம். அவரும் ஓகே என்று சொல்கிறார். அதை நம்பி நாம் அவருடன் பயணிக்கிறோம். அப்படியே ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் சென்றுவிடுகின்றன. அந்த இரண்டு வருடங்கள் வீணாகத்தான் போகின்றன. அதன் மூலமாக வரும் வலி நமக்குத்தானே தவிர அந்த நடிகருக்கு கிடையாது.
இன்னொருவரின் வலியை என்றைக்கு ஒரு நடிகர் உணர்கிறாரோ அன்றுதான் அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றமுடியும். அவர்கள் ஜஸ்ட் லைக் தட் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வளவு கனவோடு இருந்திருப்போம். அந்த இரண்டு வருடங்களில் நமது வீட்டில் மனைவியோ குழந்தையோ எப்போ அப்பா ஷூட்டிங் போறீங்க என்று கேட்டிருப்பார்கள். அவர்களை நாம் எப்படியெல்லாம் சமாளித்திருப்போம்.
ஒரு நடிகரிடம் கதை சொல்லிவிட்டு அவருக்காக காத்திருக்கும்போது ஒரு இயக்குனருக்கு அவ்வளவு வலி இருக்கிறது என்று அவர்களுக்கு புரியாமல் இருக்கும்போது, அது எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. வருத்தமாகி வருத்தமாகி ஒரு கட்டத்தில் நம்மால் இந்த படத்தை பண்ணமுடியாது, விட்டுவிடுவோம் என்று தோன்றிவிட்டது” என மனம் உடைந்து அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் சேரன்.

5 months ago
49









English (US) ·