ARTICLE AD BOX
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி
“எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷிவதா, சுவாஸிகா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஆர் பிரபு இத்திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இத்திரைப்படம் கருப்பசாமி தெய்வத்தை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை வெளியிடும் வகையில் டைட்டில் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படத்திற்கு “கருப்பு” என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பெயரை மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி
“கருப்பு” படத்தின் டைட்டில் போஸ்டரில் ஆர்ஜே பாலாஜியின் பெயர் RJB என்று இடம்பெற்றிருந்தது. இது பலரின் கவனத்தையும் குவித்தது. இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது பெயரை RJB என மாற்றிக்கொண்டதன் காரணத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது நடிகை ஊர்வசி, ஆர்ஜே பாலாஜியிடம் மூன்று எழுத்தில் பெயர் வைத்துக்கொண்டவர்கள் உச்சத்தை தொட்டிருக்கின்றனர், ஆதலால் RJB என வைத்துக்கொள் என கூறினாராம். இதன் காரணமாகத்தான் ஆர்ஜே பாலாஜி தனது பெயரை மாற்றிக்கொண்டாராம். நடிகை ஊர்வசி ஆர்ஜேபி இயக்கிய “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.