ARTICLE AD BOX
இதயத்தை கொள்ளை கொண்ட அழகி
“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் சுருள் முடி அழகியாக இளசுகளின் மனசை பிராண்டியவர்தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழில், “கொடி”, “தள்ளிப் போகாதே”, “சைரன்”, “டிராகன்” போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் மாரி செல்வராஜ்ஜின் “பைசன் காளமாடன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் “கிஷ்கிந்தாபுரி” என்ற ஹாரர் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.

ரகசியமாக படங்கள் பார்ப்பேன்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன், “எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் இரவில் பெற்றோர் தூங்கிய பிறகு ரகசியமாக பேய் படங்களை பார்ப்பேன். அணைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில்தான் பார்ப்பேன்” என கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
