ARTICLE AD BOX
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா
சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும் நிலையில், நடிகர் மாதவன் அதில் ஏமாந்த விசயத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியதாக நினைத்து, ஒரு தவறான தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!
அந்த வீடியோவில் ரொனால்டோ,இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் திறமையை பாராட்டுவது போல காட்டப்பட்டிருக்கும்,அதை உண்மை என நம்பிய மாதவன், உற்சாகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இதை பார்த்த விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா உடனே மாதவனுக்கு மெசேஜ் அனுப்பி,அது AI மூலம் உருவாக்கப்பட்ட ஃபேக் வீடியோ என்று சொல்லியுள்ளார்,அதன் பிறகே மாதவனுக்கு உண்மை புரிந்து வீடீயோவை டெலீட் செய்துள்ளார்,
AI வீடியோக்கள் எவ்வளவு நம்பமுடியாத அளவுக்கு உண்மையானதாக இருக்கின்றன என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இது அமைந்திருக்கிறது என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் என அந்த பேட்டியில் மாதவன் தெரிவித்திருப்பார்.

8 months ago
75









English (US) ·