ARTICLE AD BOX
சென்னையில் பாமக பிரமுகர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி இல்ல திருமண விழாவிற்கு சென்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னையில் இருந்து கார் மூலம் இன்று காலை தைலாபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்தார்
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது, நான் தற்பொழுது சந்தோஷமாக இருக்கிறேன்… எனவும் பின்னர் அன்புமணி ராமதாசை தாய் சரஸ்வதி அம்மாள் சந்தித்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் மகன் தாயை சந்திப்பதும் தாய் மகனை சந்திப்பதும் இயல்பு கிண்டலாக பதில் அளித்தார்
அதனைத் தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி நேற்று நடைபெற்ற திருமண விழாவில் அன்புமணி ராமதாசை சந்தித்து கைக்கூலிக்கு பேசினார் இந்த சந்திப்பு எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் இதுகுறித்து ஜிகே மணி இடம் கேட்டு நாளை பதில் கூறுகிறேன் என ராமதாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பாமகவில் மோதல் போக்கு அதிகமாக உள்ளது குறித்த கேள்விக்கு மோதல் போக்கு நான்கு நாள் இருக்கும் அதுக்கப்புறம் சரியாகிவிடும் என்று பார்த்திருங்கள் காத்திருப்போம் காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி நகைச்சுவையாக பதில் கூறிவிட்டு சென்றார்
