ARTICLE AD BOX
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்த படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்க: முதல் பாதியே இப்படி ஆமை மாதிரி நகருதே- ரசிகர்களை புலம்பவைத்த விஜய் சேதுபதியின் Ace!
இந்த நிலையில் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அப்படி மும்பையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் யூகி சேது பல கேள்விகளை கேட்டார்.
அதில், டிரைலரில் நான் பார்த்து வியந்தது, திரிஷாவுக்கு கூட பின்னால் இருந்துதான் முத்தம் கிடைத்தது, ஆனால் உங்களுக்கு முகத்திற்கு நேரா முகம் வைத்து பேசியது மட்டுமல்லாமல், உதட்டிலேயே கமல் சார் முத்தும் கொடுத்துவிட்டாரே என அபிராமியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இதெல்லாம் நாங்க விருமாண்டி படத்திலேயே ரிகர்சல் பார்த்துவிட்டோம், விடுங்க சார் என சிரித்துக் கொண்டே கூற, மொத்த படக்குழுவும் சிரித்தபடி ரியாக்ஷ்ன் கொடுத்தனர்.
