ARTICLE AD BOX
முட்டி மோதி வெளிவந்த ‘பைசன்’ பட லுக்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.வாழை படத்தின் வெற்றிக்குப் பிறகு,மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த புதிய திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைசன் படத்தில்,துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்,அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு,பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இதையும் படியுங்க: முகமது ஷமி செய்தது பாவமா… வெடித்தது புது சர்ச்சை.!
இன்று,மாரி செல்வராஜின் பிறந்த நாளை முன்னிட்டு,பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.இதில் துருவ் விக்ரம் மிக வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
துருவ் விக்ரம்,ஆதித்யா வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து, மகான் படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார்.ஆனால்,பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெறும் “துருவ்” என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இனிமேல் இவர் தன்னுடைய பெயரை துருவ் என்றே பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.தற்போது பைசன் படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.
