’அப்பா’வைத் தவிர்த்த விஜய்.. முதல்முறையாக ’திமுக’.. மகளிர் தின வீடியோவில் அரசியல்!

6 days ago 9
ARTICLE AD BOX

மகளிர் தின வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், முதல் முறையாக திமுக பெயரை வெளிப்படையாகப் பயன்படுத்தியுள்ளார்.

சென்னை: இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம், இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன்.

உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே? பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காதுதானே.

அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய, நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே.

Vijay

கவலைப்படாதீங்க, இந்த 2026ஆம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சோறு போட்ட தென்னிந்திய சினிமாவை கண்டபடி விமர்சித்த ஜோதிகா… வலுக்கும் கண்டனம்!

முன்னதாக, விஜய் வெளியிடுவதற்கு சில நேரத்துக்கு முன்பு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பெண்களுக்கான திட்டங்களைக் குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். மேலும், அப்பா என்றும் தன்னை ஸ்டாலின் குறிப்பிட்டு வருவதால், விஜய் இந்த வீடியோவில் அப்பா என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்துள்ளார்.

அதேநேரம், கடந்த ஆண்டு கட்சியைத் தொடங்கிய விஜய், இதுவரை மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வந்தாலும், ஒருமுறை கூட திமுக, பாஜக என பெயரைக் குறிப்பிடவில்லை, முதல் முறையாக மகளிர் தின வாழ்த்தில் தான் திமுக பெயரைப் பயன்படுத்தி உள்ளதால், 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

  • A fan touched and spoke to the actress பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
  • Continue Reading

    Read Entire Article