ARTICLE AD BOX
பட்டத்தை திறந்த கமல்
பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற ஆண்டு தன்னை உலக நாயகன் என்று இனி அழைக்க வேண்டாம் என அறிவித்துவிட்டார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும் இப்போதும் கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் இணையத்தில் உலக நாயகன் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு புதிய பட்டம்
கமல்ஹாசன் “தக் லைஃப்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ள செய்தி பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில் இதில் கமல்ஹாசனுடன் திரிஷா, சிம்பு, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான வெளியீட்டு தேதியை அறிவிக்கும் டீசர் வெளிவந்தபோது அதில் விண்வெளி நாயகன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் வருகிற மே மாதம் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனுக்கு “விண்வெளி நாயகன்” என்ற பட்டத்தை அளிக்கப்போகிறார்களாம். அதுமட்டுமல்லாது “விண்வெளி நாயகன்” பாடலையும் பிரத்யேகமாக ஒலிபரப்பப்போகிறார்களாம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பட்டத்திற்காகத்தான் கமல்ஹாசன் தனது உலக நாயகன் பட்டத்தை துறந்தாரா? அப்படி என்றால் இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டதா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.