ARTICLE AD BOX
சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா அமித்ஷா ஒரு முட்டாள் என விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்க: திமுக ஆட்சியை அகற்ற அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக டிடிவி பிரச்சாரம் செய்வார் : அமமுக தகவல்!
அவர் பேசியதாவது, சாதனைகளுக்காக மட்டும் ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் என கூற முடியாது, இந்திரா காந்தி மறைந்த போது ஆட்சி மாறியது, எம்ஜிஆர் மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது.
1.76 லட்சம் கோடி 2 ஜி ஊழல் என சொன்னார்கள். அப்போதும் ஆட்சி மாறியது, ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது.
எதிரிகள் வெவ்வேறு வடிவத்தில் வருவார்கள். மதுரைக்கு வந்த அமித்ஷா டெல்லியை பிடித்துவிட்டோம், ஹரியானாவை பிடித்துவிட்டோம், மராட்டியத்தை பிடித்துவிட்டோம் அடுத்து தமிழ்நாடு என கூறியுள்ளார்.

முட்டாள்.. டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன், ஹரியானாவில் ஒரு தனிமனிதனை தோற்கடித்தீர்கள். மராட்டியத்திலு ஒரு தனி மனிதனை. ஆனால் ஸ்டாலின் தனி மனிதன் இல்லை. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் உள்ளது என பேசினார்.
அமித்ஷாவை முட்டாள் என ஆ.ராசா விமர்சித்து பேசியதற்கு கடும் கண்டனங்கள குவிந்து வருகின்றன. பாஜக தலைவர்கள் ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு குரலும் எழுப்பி வருகின்றனர்.