ARTICLE AD BOX
பிக்பாஸ் ஜோடி
சின்னத்திரை நடிகையான பாவனி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகளவு பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தவர்தான் அமீர். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்தே பாவனியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் முதலில் அதனை பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இரண்டு வருடங்களுக்கும் மேலாக லிவ் இன் உறவில் இருந்த இருவரும் கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், அமீர் இஸ்லாமியர் என்பதால் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்ற கருத்தை கிளப்பிவிட்டார். இந்த கருத்தை இணையத்தில் பலரும் பிரதிபலித்தனர்.
தமிழக அரசு கொடுத்த விளக்கம்
இந்த கருத்து மிகத் தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது இரு வேறு மதத்தினர் திருமணம் செய்துகொள்ள சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது என கூறியுள்ளது.
மேலும் இந்த சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதன் மூலம் பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்தில் உண்மைத் தன்மை இல்லை என பலருக்கும் தெரிய வந்துள்ளது.

6 months ago
67









English (US) ·