ARTICLE AD BOX
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா, ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
தனது தந்தை படமான படையப்பா, பாபா, சந்திரமுகி போன்ற படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய அவர், பின்னர் அன்பே ஆருயிரே, சிவகாசி, மஜா, சண்டைக்கோழி உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றினார்.
இதையும் படியுங்க: திருந்த மாட்டேல, வருந்த மாட்டேல- மீண்டும் மீண்டும் காப்பியடிக்கும் ராக்ஸ்டார் அனிருத்?
பின்னர் கோச்சடையான் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அனிமேஷன் படமாக வெளியான நிலையில், படம் படுதோல்வியை சந்தித்தது. 125 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம், வெறும் 42 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்த படத்தை EROS நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார் சவுந்தர்யா. ஆனால் படம் தோல்வியால் சவுந்தர்யா நஷ்ட ஈடாக சில கோடிகளை ஈரோஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டி இருந்தது.
ஆனால் சவுந்தர்யா தராததால், அந்த நிறுவனம் வழக்கு போட்டது, பல வருடம் இந்த வழக்கு நடந்து வந்தது. தற்போது அதே போன்ற சிக்கலில் மாட்டியுள்ளார் சவுந்தர்யா.
குருதிப்புனல் என்ற வெப்சீரியஸ் அமேசான் நிறுவனத்துக்காக சௌந்தர்யா தயாரித்து வருகிறார், அமேசான் கொடுத்த பணத்திற்குள் சீரியஸை எடுத்துவிட் வேண்டும், ஆனால் 80 சதவீதம் இந்த சீரியஸ் முடிந்த நிலையில் அமேசான் கொடுத்த பணம் செலவாகிவிட்டது.

இதனால் பணம் கேட்டால் அமேசான் தந்துவிடும் என நினைத்து கேட்டுள்ளார் சௌந்தர்யா. ஆனால் கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் கறாராக முடியாது என அமேசான் கூற, என்ன செய்வதென்று திண்டாடி வருகிறார் சௌந்தர்யா.
