ARTICLE AD BOX
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை: மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மதுரை கல்லூரி மைதான வளாகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பழனிவேல் தியாகராஜன், “தேசிய கல்விக் கொள்கை முதல்முறையாக 1968ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையை 57 ஆண்டுகளாகியும் முறையாக அமல்படுத்த முடியவில்லை. இருக்கின்ற நிதியை வைத்து எப்படி சிறப்பான கல்வியை வழங்குவது என்பதே மாநில அரசின் இலக்காக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால், அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? சில மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.
சக்சஸான மாடலை எடுத்துவிட்டு, பெயிலியரான மாடலைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையே இந்தி தெரியாது எனச் சொல்கிறார். அதனால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, “பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார். அதனால் பிடிஆருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம். அவரது மகன் இந்தியக் குடிமகனா? அல்லது அமெரிக்க குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் மொழியை விட ஆங்கில மீடியத்தில்தான் அதிகமாக படிக்கிறார்கள்.
இதனால் தமிழ் மீடியம் 27 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கிறோம். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இது குறித்து சிந்திக்காதது ஏன்?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.