ARTICLE AD BOX
நடிகரும், தவெக தலைவருமான விஜய், அண்மையில் 2வது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சு இன்னும் அரசியல் கட்சி தலைவர்களிடையே எதிர்வினைகளை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் தவெக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் அமைச்சரின் சொந்த ஆத்தூர் தொகுதியில் சின்னாளப்பட்டி, செம்பட்டி, பித்தளைபட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்தக்காரர்களின் ஊழல் குறித்தும் ஆத்தூர் தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என தவெக தலைவர் விஜய் பாணியில் அமைச்சர் ஐ.பெரியசாமியை கேள்வி கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியிருந்தனர். இது குறித்து தவெக போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
