ARTICLE AD BOX
ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை அம்மன் திருவிழா, காவம்மா திருவிழா ஆகியவை போன்ற அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்க: மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கு தானே சூனியம்.. திமுக இனி 10 ஆண்டு ஆட்சிக்கு வராது!
திருப்பதி மாவட்டம் வெங்கடகிரியில் உள்ள காவம்மா கோவிலில் திருவிழா நடைபெறும் தற்போதைய நிலையில் ஊர்வலமாக புறப்பட்ட அம்மனுக்கு அதே ஊரை சேர்ந்த சோபன் பாபு என்பவர் திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்டார்.
அப்போது அருள் வந்து ஆடிக்கொண்டிருந்த சோபன் பாபுவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் காவம்மா கோவிலில் திருவிழாவில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு திருஷ்டி கழித்த சோகன் பாபு என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணமடைந்த வீடியோ பதை பதைக்க வைத்துள்ளது#Trending | #AndhraPradesh | #festival | #viralvideo | #updatenews360 pic.twitter.com/ICFGS7qOKF
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 2, 2025அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சோபன் பாபு மரணம் அடைந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் வெங்கடாகிரியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
