ARTICLE AD BOX
தாய் மூகாம்பிகையின் பக்தர்
இசைஞானிஇளையராஜா தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் என்பதை நாம் அறிவோம். அவர் பாடிய “ஜனனி ஜனனி” என்ற பாடல் மிகவும் பக்தி நயம் சொட்ட சொட்ட பாடிய பாடலாகும். இளையராஜா அவ்வப்போது தாய் மூகாம்பிகையை தரிசனம் செய்ய செல்வதுண்டு. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை தேவி கோவிலுக்கு தரிசிக்க சென்ற இளையராஜா மிகவும் விலை உயர்ந்த காணிக்கையை வழங்கியுள்ளார்.
எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகள்
இளையராஜா தனது சினிமா கெரியரில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினார். இளையராஜா மூகாம்பிகை தேவி கோவிலுக்கு காணிக்கை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இளையராஜாவின் பொன் விழா ஆண்டிற்கான பாராட்டு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
