ARTICLE AD BOX
வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை கூறியுள்ளார்.
பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் அண்மையில் FIRE என்ற படத்தில் நடித்திருந்தார். மாடலிங்கான இவர் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்க: கையெழுத்து போட மட்டும் அப்பா தேவையா? பக்கத்துக்கு பக்கம் ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்!
அதில் 18 வயதில் மாடலிங் துறையி லநுழைந்த போதே, அந்த துறை எப்படி என்றே தெரியாமல் நுழைந்தேன், தினமும் 100 ஷர்ட் மாத்தி மாத்தி போடணும், அப்போதான் 5 ஆயிரம் ரூபாய் தருவாங்க.
காலையில் 9 மணிக்கு போனால் இரவு 9 மணி ஆகவிடும். போட்டோஷூட் நடந்துக்கிட்டே இருக்கும். என் குடும்பத்துக்கு நான் தான் சம்பாதித்து கொடுக்க வேண்டிய நிலைமை.
என்னுடைய அப்பா செஃப் ஆக இருந்தார். கிடைத்த சம்பளத்தை மதுவுக்கு செலவழிப்பார். இதைப்பார்த்த அம்மாவும் சரக்குக்கு அடிமையாகிவிட்டார், இருவரும் குடித்து கொண்டு சண்டை போட்டுக்கெண்டே இருப்பார்கள்.
நான் 200 ரூபாய் அம்மாவிடம் கொடுத்தால்தான், எனக்கு சாப்பாடே போடுவாங்க. இதனால் பல நேரங்களில் அம்மா ஹோட்டலில் சப்பாத்திதான் சாப்பிடுவேன்.
நான் 10வது படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஒரு நாள் என் வீட்டுக்கு அழைத்து வந்த போது, ஒரு பக்கம் அம்மா சரக்கடித்து படுத்துக்கிடக்க, மறு பக்கம் அப்பாவும் மது அருந்தி கிடந்ததால், இதை பார்த்தவுடன் அந்த பெண் கிளம்பியவள் தான் இன்று வரை நான் அவரை பார்க்கவில்லை. நான் பலமுறை அவளிடம் பேச முயற்சி செய்து பலனில்லை.
இந்த காதல் தோல்வி வலி எனக்கு பெரிய வலியாக இருந்தது. இதனால் மதுவுக்கு அடிமையானேன், தினமும் குடித்தேன். ஒரு நாள் இது தவறு என்பதை உணர்ந்த நான், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.
பிக் பாஸ் வந்தேன், என் அப்பா இறந்துவிட்டார். கொஞ்சநாளில் என் அம்மாவும் இறக்க, வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது முக்கியம் என்பதை பெற்றோரிடம் தான் கற்றுக்கொண்டேன். அவர்கள் சரக்கு அடித்து என்னை கண்டு கொள்ளாததைதான் வாழ்க்கையில் எப்படி இருக்கக்கூடாது என்பதை தெரிந்து கொண்டேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

5 months ago
72









English (US) ·