ARTICLE AD BOX
பன்னீர் புஷ்பங்கள் சாந்தி…
1980களில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாந்தி கிருஷ்ணா. இவர் தமிழில் “சிவப்பு மல்லி”, “சின்ன முள் பெரிய முள்” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்தின் மூலம் இவர் மிகப்பிரபலமாக ஆனார்.
அதன் பின் பல திரைப்படங்களில் இவர் வலம் வந்தாலும் திருமணம் ஆன பிறகு சினிமாவில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார். இவர் 1984 ஆம் ஆண்டு ஸ்ரீநாத் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 1995 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின் 1998 ஆம் ஆண்டு சதாசிவன் என்பவரை சாந்தி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த உறவும் நீடிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் சினிமாவில் பிசியாக வலம் வரத்தொடங்கினார். குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் மலையாளத்தில் “மச்சன்டே மாலகா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மோகன்லால், மம்மூட்டி என்னை கண்டுக்கவேயில்லை…!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகோண்ட சாந்தி கிருஷ்ணா, “ஃபகத் ஃபாசில், நிவின் பாலி போன்ற நடிகர்களுக்கு நான் அம்மாவாக நடிக்கத் தொடங்கிய பிறகு மோகன் லால், மம்மூட்டி போன்வர்களுக்கு ஜோடியாக என்னை நடிக்க வைப்பது என்பது பொறுத்தமற்றது என்று அவர்கள் உணரலாம். அவர்கள் இனி ஒரு போதும் என்னை நினைத்துப்பார்க்க மாட்டார்கள்.

இப்போதும் மோகன்லால், மம்மூட்டிக்கு ஜோடியாக என்னை நடிக்க வைத்தால் மலையாள சினிமா ரசிகர்கள் நிச்சயம் என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் என்னை கண்டுகொள்வதில்லை” என மனம் நொந்தபடி பேசியுள்ளார். சாந்தி கிருஷ்ணா இவ்வாறு பேசியது மலையாள ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவா நடிச்சா கண்டுக்கமாட்டீங்களா?- மோகன்லால் பற்றி மனம் நொந்துப்போய் பேசிய பிரபல நடிகை!
                  
                        2 months ago
                                33
                    








                        English (US)  ·