ARTICLE AD BOX
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலுக்கு நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி வருகை புரிந்தார் தொடர்ந்து கோயிலில்பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலை நாயகி அம்பாள், மலை மீது அருள் பாலிக்கும் தோனியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமி சன்னதிகளில் நடிகை கௌதமி வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படியுங்க: அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் போது மயங்கி விழுந்து மரணமடைந்த பக்தர் : அதிர்ச்சி வீடியோ!
கோயில் பிரகாரத்தில் சிவாச்சாரியார் கோயில் வரலாற்றினை கூறியவாறு அதனை கேட்டு அதிக கௌமி பிரகாரம் வலம் வந்தார்அப்போது கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் நடிகை கௌதமியுடன் செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். சீர்காழி அதிமுக பிரமுகர் மார்கோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை.
அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா, இவ்வளவு வருடமாக அரசியலில் சாதித்து படிப்படியாக கட்சியை கட்டி ஒருங்கிணைத்து நான்கு ஆண்டு காலம் சிறப்பாக முதலமைச்சராக ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது.
பெரியவர்களுக்கு மரியாதை தருவது என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். அதிமுக கூட்டணியில் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது போக போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவினை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என நடிகை கௌதமி தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என தெரிவித்தார்

5 months ago
50









English (US) ·