ARTICLE AD BOX
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்க: ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ரகளை.. தட்டிக் கேட்ட மக்கள் மீது கொடூர தாக்குதல்!
அப்போது அவர் கூறுகையில்: பொதுவெளியில் பெண்களின் கண்ணியம் காக்கப்படவேண்டும். திரைப்பட கதாநாயகர்களாக இருந்தாலும் இதை கடைப்பிடிக்கவேண்டும் என்பததற்காகவே தான் தெரிவித்த கருத்துக்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சரியான நடைமுறையில்லை.
அரசியல் கட்சித் தலைவர்கள்,தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், திரைப்பட நடிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பலர் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை உதவி செய்து வருகின்றனர்.
ஆனால் அதை யாரும் பெரிதாக விளம்பரம் படுத்திக் கொள்வது இல்லை. ஆனால் நடிகர் விஜய் அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

விஜய் மற்றும் அவரது ரசிகர்களும் என் மீது கொண்டுள்ள வன்மத்தை நீக்கிக் கொள்ளவேண்டும். தமிழ் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி எனக்கு தமிழ் சமூகத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
கண்ணகி பிறந்த என் மண்ணில் வாழும் தமிழ் சமூகப் பெண்கள் ஒருபோதும் என்னை தவறாக எண்ணமாட்டார்கள் என்றார் வேல்முருகன். பேட்டியின்போது தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் விழுப்புரம் மாவட்டச்செயலர் குமரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
