ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க முடியாது
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று கூறியது கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியது. அம்மாநிலத்தில் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கூறினர். எனினும் கமல்ஹாசன், “மன்னிப்பு கேட்க முடியாது” என திடமாக கூறினார்.
அவர் சொன்னா தப்பாகுமா?
இந்த நிலையில் நேற்று நேச்சுரல்ஸ் என்ற ஐஸ் கிரீம் கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் நடிகர் அசோக் செல்வன். அப்போது அவரிடம் கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அசோக் செல்வன் “அது வாத்தியார் மிகவும் அன்போடு கூறிய விஷயம். எல்லோருமே ஒரே குடும்பம் என்ற அர்த்தத்தில்தான் அவர் அதனை கூறினார். அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற அர்த்தத்தில்தான் அவர் அவ்வாறு கூறினார். எப்போதும் அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சனைகளை கிளப்புவார்கள். ஆனால் அதையும் தாண்டி படம் என்பது ஒரு பொழுதுபோக்குதான்” என மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார்.

5 months ago
53









English (US) ·