ARTICLE AD BOX
அரசு அதிகாரிகளுடன் உல்லாசமாக இருந்து தெரியாமல் வீடியோ எடுத்து பணம் பறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் அய்யங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரீட்டர். 48 வயதாகும் இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.
இதையும் படியுங்க: திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!!
இவர் திண்டுக்கல்லை சேர்ந்த அரசு பொதுப்பணித்துறை பொறியாளரிடம் தகாத உறவில் இருந்துள்ளார். 57 வயதாகும் அந்த அதிகாரியும் அடிக்கடி ரீட்டாவை சந்தித்து மனம் விட்டு பேசிவந்துள்ளனர்.
இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை ரீட்டாவே தனது செல்போனில் அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார், மேலும் இந்த வீடியோவை காட்டி ஆயிரக்கணக்கான பணங்களை வாங்கியுள்ளார்.
மேலும் பணம் வேண்டும் என கூறி, லட்சக்கணக்கில் கேட்டு அரசு பொறியாளரை டார்ச்சர் செய்துள்ளார். அவர் பணம் தர முடியாது என கூறினால், வீடியோவை உன் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார்.

டார்ச்சரை தாங்க முடியாத அந்த அரசு அதிகாரி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திண்டுக்கல் ரீட்டாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தன. இதே போன்று மேலும் சில அரசு அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
ரீட்டா வலையில் சிக்கிய அரசு அதிகாரிகள் யார், வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ரீட்டாவிடம் இருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.