ARTICLE AD BOX
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க் அமைப்பது, ஷாப்பிங் மால்கள் கட்டுவது ஆகியவை உள்ளிட்ட பணிகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகளில் தெலுங்கானா அரசு ஈடுபட்டு வந்தது.
இதையும் படியுங்க: அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!
மாநில அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் அந்த நிலத்தை ஏலத்தில் விற்பனை செய்ய வசதியாக சமன் செய்யும் பணிகள் இன்று துவங்கிய நடைபெறுகின்றன.

அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமம் செய்யும் பகுதிக்கு சென்ற மாணவ, மாணவிகள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மாணவ மாணவிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.
