ARTICLE AD BOX
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள், கல்வி உதவி தொகை என ஆண்டுதோறும் சுமார் 50 மாணவர்களுக்கு 50 லட்ச ரூபாய்களை இலவசமாக, வழங்கிவரும் ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.
இந்த ஆண்டு எந்தவித கட்டணமும் இல்லாமல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான, அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம், என செலவாகும், மூன்று லட்ச ரூபாயை, முற்றிலும் இலவசமாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக ஷாலோம் எஜிகேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஷாலோம் எஜுகேஷன் மையத்தில் நடைபெற்றது.

அப்பொழுது பேசிய அனிதா காமராஜ் கூறியதாவது, இந்த ஆண்டு ஷாலோம் எஜுகேஷனல் நிறுவனம் வழியாக வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில பதிவு செய்யும் முதல் 125 மாணவர்களில் இரு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு வருடத்திற்கான கல்வி கட்டணங்களில் இருந்து 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்பட இருப்பதாகவும், முதல் 125 மாணவர்களில், 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு வருடத்திற்கான மொத்த கல்வி கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் விலக்கு அளிப்பதாகவும், முதல் 125 மாணவர்களில் இருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு வருடத்திற்கான மொத்த கல்வி கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மேலை நாடுகளான தென் அமெரிக்கா, போலந்து, ரஷ்யா, உக்ரைன், அர்மேனியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம், போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது எனவும், கடந்த 16 ஆண்டுகளில், 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ, கனவை ஷாலோம் எஜிகேஷனல் நிறுவனம் நிறைவு படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் எனவும், மேலை நாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் அவர்களின் கனவை நாங்கள் நினைவாக்கி தருவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
