ARTICLE AD BOX
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றி கடனை செலுத்துவார்கள்.
மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள் மேலும் இதனைத் தொடர்ந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்நிலையில் இந்த கோவிலில் பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் அறை நிர்வாணத்தில் ஆபாச நடனம் ஆடுவதும் மதுபோதையில் அட்டூழியங்கள் செய்வதும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதும் உள்ளிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது இதனைப் பார்த்த பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: ரயில் தண்டவாளத்தில் கார் ஒட்டிய இளம்பெண்… தடுக்க சென்றவர்களுக்கு கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ!
ஒழுக்கத்தின் அடையாளமாக இருக்கும் பூசாரிகள் அர்ச்சகர்கள் கண் கூசும் செயல்களில் ஈடுபடும் போது பக்தர்கள் மன விரக்த்தி அடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் சமயத்தில் இந்தக் கோவிலின் அர்ச்சகர்கள் செய்யும் அட்டூழியம் தற்போது வெளியான இந்த வீடியோவால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் அரை நிர்வான ஆபாச நடனம் மற்றும் மது போதையில் செய்யும் அட்டூழியங்களின் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானதால் பரபரப்பு… pic.twitter.com/cv8CImjM3F
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 26, 2025ஸ்டாலின் அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஏன் கண்டு கொள்ளவில்லை கோவிலில் சிசிடிவி கேமராக்களை பார்த்து இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வீடியோ வெளிவந்த பிறகு காவல்துறையினர் ஏன் மௌனம் காக்க வேண்டும் என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
25 லட்சம் அபராதம்? தக் லைஃப் ஓடிடி வெளியீட்டில் திடீர் மாற்றம்! இப்படி ஒரு நிலைமையா?

4 months ago
59









English (US) ·