ARTICLE AD BOX
தொடங்கியது கூலி ஃபீவர்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. அதுமட்டுமல்லாது இன்று இரவு தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக டிக்கெட் முன்பதிவு செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு “கூலி” Fever அதிகரித்துள்ள நிலையில் இத்திரைப்படம் கேரளாவில் சைலண்ட்டாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது.

அரை மணி நேரத்தில் வாஷ் அவுட்!
அதாவது கேரளாவில் சில மணி நேரங்களுக்கு முன் “கூலி” திரைப்படத்தின் வரையறுக்கப்பட்ட முன்பதிவு (Limited Booking) தொடங்கப்பட்டதாம். முன்பதிவு தொடங்கப்பட்ட 30 முதல் 40 நிமிடங்களில் 40,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளது. இதனை Sumit Kedal என்ற இணைய பயனாளர் பகிர்ந்திருக்கிறார். அப்பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“கூலி” திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதாலும் ரஜினிகாந்த் நடித்துள்ளதாலும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. இதனால் “கூலி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் அதகளம் செய்வது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
